போஸ் கொடுத்த படி நின்ற மாப்பிள்ளை.. அடுத்த செகண்ட்டில் மணப்பெண் செய்த விஷயம்.. "கொஞ்ச நேரத்துல என்னம்மா பண்ண பார்த்தே.."
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீப காலமாகவே, திருமண நிகழ்ச்சி என்றாலே ஏதாவது ஒரு வகையில், அங்கு ஒரு கலாட்டா நிச்சயம் நிரம்பி இருக்கும்.

அதிலும் குறிப்பாக, திருமணத்திற்கு முன், Pre Wedding, திருமணத்திற்கு பின் Post Wedding எனவும் பிரித்து புதுமணத் தம்பதிகள், வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்கள்.
இப்படி அனைத்திலும் சேர்த்து, திருமண நேரத்தில் மணமக்களின் டான்ஸ், காமெடி, ரீல்ஸ் வீடியோக்கள் என திருமணம் தொடர்பான பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.
Wedding வீடியோக்கள்
அதே போல, போட்டோஷூட் சமயத்திலும் தம்பதிகள் ஏதாவது முயற்சி செய்து, கடைசியில் அது வேடிக்கையாக முடிய, இது தொடர்பான வீடியோக்கள் கூட நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும். அப்படி ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலடித்து வருகிறது.
இது தான் காதல்'ல விழுறதோ??..
மிக விமரிசையாக திருமண நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், நீருக்கு நடுவே க்ளாஸ் ப்ளோரிங் செய்யப்பட்ட மேடை ஒன்றில், புது ஜோடி ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்த படி நிற்கிறார்கள். அப்போது, மாப்பிள்ளை ஏதோ பேசிக் கொண்டிருக்க, திடீரென மணப்பெண், மாப்பிள்ளையை நீரில் தள்ளி விட முயற்சிக்கிறார். அப்போது மாப்பிள்ளையோ, தனது மனைவியையும் கூடவே சேர்த்து இழுத்து பிடித்துக் கொள்ள, இருவரும் ஒன்றாக நீரில் விழுந்து கொள்கின்றனர்.
அங்க கூட ரொமான்ஸ் தான்..
தண்ணீரில் விழுந்த பிறகும், அங்கேயும் காதல் செய்கிறது இந்த ஜோடி. மாப்பிள்ளையின் முதுகை கெட்டியாக பிடித்தபடி, உப்புமூட்டை ஏறி, கன்னத்தில் முத்தமும் கொடுக்கிறார் மணப்பெண். திருமண நிகழ்வின் போது, நடக்கும் மற்ற Prank வீடியோக்கள் போல, இதுவும் வைரலாகி வரும் நிலையில், பலரும் இது தான் காதலில் விழுவதா என ஜாலியாக குறிப்பிட்டு வருகின்றனர்.
அதே போல, மேலும் சிலர், தங்களின் நண்பர்களில் யாருக்காவது திருமணம் நடந்தால், இது போல திட்டமிட வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். மாப்பிள்ளையை நீரில் தள்ளி விட்டு, தானும் சிக்கிக் கொள்ளும் மணப்பெண்ணின் வீடியோ, தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
