LIFE STYLE: ஷூ லேஸ் மாடல்ல தோடு..? - இது புதுசால்ல இருக்கு.! இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்.!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்ஃபேஷன் உலகில் புதிய புதிய வரவுகள் நாளும் நாளும் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு துறையிலும் தொடர்ச்சியான பல புதிய கண்டுபிடிப்புகள், அப்டேட்கள் என்கிற பெயரில் உருவாகி வந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி அனைத்து துறையிலும் அப்டேட்கள் ஃபேஷன் என்கிற பெயரில் தான் அழைக்கப் படுகின்றன. அப்படி இருக்கும்போது ஃபேஷன் என்கிற துறை அப்டேட் இல்லாமல் இருந்தால் எப்படி?
ஆம், ஃபேஷன் உலகில் எதுவுமே அப்டேட் ஆகவும் ஆடம்பரமாகவும் இருக்கும். நாம் சாதாரணமாக பயன்படுத்தும், பார்க்கும் ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு வண்ணங்களில்.. வெவ்வேறு டிசைன்களில்.. நாளும் நாளும் புதிய ஐடியாக்களுடன் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றின் விலை மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப அவற்றை மக்கள் வாங்கவும் செய்கின்றனர்.
சந்தைக்கு வரும் இந்த பொருட்கள் வழக்கத்துக்கு மாறாக, அதே சமயம் வழக்கமான பயன்பாட்டை கொண்டிருக்கும்போது, மக்கள் அவற்றை விரும்பி வாங்குகின்றனர். அதற்கு காரணம் அந்த பொருளின் புதிய வடிவமோ அல்லது அதன் வடிவத்தில் இருக்கும் புதிய தன்மையோதான். அந்த வகையில் காதில் அணியக்கூடிய தோடு ரகம் ஒன்று வித்தியாசமாகவும் விலை உயர்ந்ததாகவும் வலம் வருகிறது.
தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட விலை மதிக்கத்தக்க பொருட்களால் இந்த தோடு உருவாகி இருக்கிறதா..? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஷூ லேஸில் இருந்து மீளுருவாக்கம் செய்யப்பட்ட பொருள்தான் இது. ஆம், உலகின் பிரபலமான ப்ரீமியம் பிராண்ட்களில் ஒன்றான Balenciaga என்கிற நிறுவனம் தற்போது புதுமையான காதணியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஷூவில் கட்டப்படும் லேஸை கொண்டு காதில் அணியக்கூடிய வகையில் இந்த தோடு வித்தியாசமான முறையில் உருவாகி இருக்கிறது. இதன் விலை 261 டாலர்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்திய மதிப்பில் 20 ஆயிரத்து 847 ரூபாயாக இருக்கும் என்று தெரிகிறது. இரு வேறு நிறங்களில் வெரைட்டியாக கிடைக்கும் இந்த ஷூ லேஸ் தற்போது புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இதே நிறுவனம், குப்பைகளை போட்டு வைக்கும் ட்ராஷ் பேக்கை 1790 டாலருக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
