கார்..மொத்த வீட்டுக்கும் டைல்ஸ்..இல்லேன்னா '28 ஆயிரம்' மொய் வைங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Oct 03, 2019 03:54 PM
பொதுவாக திருமண வைபவங்களின் போது மணமகன்-மணமகள் இருவருக்கும் நண்பர்கள்,உறவினர்கள் தங்களால் முடிந்த பரிசுப்பொருள்களை அளிப்பர்.சிலர் பொருளாகவும்,சிலர் பணமாகவும் தங்களால் முடிந்த வகையில் பரிசுப்பொருட்களை மணமக்களுக்கு அளிப்பது வாடிக்கை.
சில நேரங்களில் பரிசுப்பொருள்,பணம் எதுவும் வேண்டாம் என மணமக்கள் கேட்டுக்கொள்வதும் உண்டு. இதற்கு நேர்மாறாக அமெரிக்காவை சேர்ந்த கல்யாணப்பெண் ஒருவர் தனக்கு என்னென்ன பரிசுப்பொருட்கள் வேண்டும் என தேர்வுசெய்து பட்டியல் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் கிச்சன் பொருட்கள் என்றால் 280 டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் 18 ஆயிரத்துக்கு மேல்) இருக்க வேண்டும்.உங்களால் முடிந்தால் கார் வாங்கித்தரலாம்,இல்லையென்றால் மொத்த வீட்டிற்கும் டைல்ஸ் வாங்கி கொடுங்கள்.ஆடைகள் என்றால் 325 டாலர்களுக்கு மேல் வாங்கி வாருங்கள்.பணமாக அளிக்க வேண்டும் எனில் 400 டாலர்கள் பரிசாக அளியுங்கள்.என தெரிவித்துள்ளார்.
மேலும் லிங்க் ஒன்றையும் அளித்து அந்த பட்டியலில் ஏதாவது வாங்குவதென்றால் தன்னிடம் முதலிலேயே சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இதைப்பார்த்த வலைதளவாசிகள் பலரும் இந்த கண்டிஷன்களை தங்கள் பாணியில் விமர்சனம் செய்து வருகின்றனர்.