‘யூடியூப் வீடியோ பார்த்து’.. ‘பாப்கார்ன் செய்த சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Sep 21, 2019 05:23 PM
யூடியூபைப் பார்த்து டின்னில் பாப்கார்ன் செய்த 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த யியா என்ற பெண் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 4 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். அவர் காலியான குளிர்பான டின்னைக் கொண்டு பாப்கார்ன் செய்வது எப்படி என வீடியோ ஒன்றை யூடியூபில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ஸெ ஸெ என்ற 14 வயது சிறுமி அதேபோல தனது தோழியுடன் சேர்ந்து பாப்கார்ன் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அவர் குளிர்பான டின்னுக்குப் பதிலாக ஆல்கஹால் டின்னைப் பயன்படுத்தியதால் திடீரென நொடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 93 சதவிகித காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி 2 வார சிகிச்ச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருடைய தோழி 13 சதவிகித தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்புக்கு யூடியூப் வீடியோ தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து வீடியோ பதிவிட்ட பெண் சிறுமியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அந்தப் பெண், “எச்சரிக்கை வாசகம் குறிப்பிடாதது என்னுடைய தவறுதான். சிறுமி நான் பயன்படுத்திய அதே கருவிகளை பயன்படுத்தாததே விபத்துக்குக் காரணம்” எனக் கூறியுள்ளார்.