'ஏஞ்செலினா ஜோலி' போல மாறிய.. இன்ஸ்டாகிராம் ஸ்டாரை.. 'சிறையில்' தள்ளிய போலீஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 08, 2019 07:43 PM

ஹாலிவுட் பிரபல நடிகை ஏஞ்செலினா ஜோலி போல மாற வேண்டும் என்ற ஆசையில் அவரைப்போல முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பெண்ணை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Iranian girl arrested for posting spooky Angelina pics

ஈரானிய பெண் சகர் தபார் இன்ஸ்டாகிராமில் ஏஞ்செலினா ஜோலி போல மேக்கப் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். இதற்காக அவர் பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் செம வைரலாகியது. அதேபோல காவல் துறையின் பார்வைக்கும் சென்று விட்டது.

சகரின் செயல்கள் தவறென்றும், தவறான வழியில் பெயர், புகழ், பணம் போன்றவற்றை சகர் சம்பாதித்துள்ளார் என்றும் கூறி அவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. மேலும் எதிர்கால தலைமுறையையும் இவர் தவறான வழிகளில் தூண்டுகிறார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர ஏஞ்செலினாவை இழிவுபடுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டும் சகர் மீது வைக்கப்பட்டுள்ளது. ஈரானை பொறுத்தவரை பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த அனுமதி இல்லை. இன்ஸ்டாகிராம் பயன்படுத்த மட்டுமே அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #INSTAGRAM