'திவாலான' உலகின் 'மிகப்பெரிய' நிறுவனம்..ஒரே நேரத்தில்..178 ஸ்டோர்கள் 'மூடல்'
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Sep 30, 2019 08:41 PM
பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமீபத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது Forever 21 நிறுவனம் இணைந்துள்ளது.
மொத்தம் 57 நாடுகளில் 800-க்கும் அதிகமான ஸ்டோர்களைக் கொண்ட Forever 21 நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.முன்னணி ஆடை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் சர்வதேச அளவிலும் பிரபலமான ஒன்றாகும்.
இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் 178 ஸ்டோர்கள் விரைவில் மூடப்பட உள்ளது. மாறிவரும் இளைஞர்களின் ரசனை,மக்களின் பேஷன் ட்ரெண்ட் மாறுதல் போன்றவற்றால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் Forever 21 நிறுவனத்துடன் பார்னிஸ் நியூயார், டீசல் USA, ஷூசோர்ஸ் ஆகிய நிறுவனங்களும் வரிசையாக திவாலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : #FASHION21 #AMERICA