மெல்ல 'விலகும்' கொரோனாவின் பிடி... '17 நாட்களுக்கு' பிறகு... முதல்முறையாக 'குறைந்த' பலி எண்ணிக்கையால்... துளிர்த்துள்ள 'நம்பிக்கை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 06, 2020 03:24 PM

இத்தாலியில் 17 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Europe Italys Coronavirus Death Curve Falls After 17 Days

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி ஆகும். அங்கு இதுவரை 1.29 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 15,887 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் கடந்த சனிக்கிழமை முதல் உயிரிழப்புகள் 23 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் 19ஆம் தேதிக்குப் பிறகு நேற்று முதல்முறையாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு நேற்று 525 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 19ஆம் தேதி கொரோனாவால் 427 பேர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு அதிகரித்துக்கொண்டே சென்ற உயிரிழப்பு தற்போது குறைந்துள்ளது.

மேலும் அங்கு மருத்துவமனைகளில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வருவதும் நேற்று முதல்முறையாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவை குறைந்து வருவதாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அந்த நாட்டு மக்களிடம் நம்பிக்கை துளிர்விடத்  தொடங்கியுள்ளது.