"கூகுள் நிறுவனர் 'சுந்தர் பிச்சை' என்னிடம் மன்னிப்பு கோரினார்..." "அவர் மரியாதைக்குரிய நபர்..." "சிறந்த மனிதர்..." அதிபர் 'ட்ரம்ப்' செய்தியாளர்களிடம் 'விளக்கம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம் குறிப்பட்டார்.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிபர் ட்ரம்ப் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை மேலும் தெரிந்து கொள்ளவும், வைரஸ் சோதனைக்கு பதிவு செய்ய உதவும் வகையிலும் அமெரிக்க அரசுக்காக பிரத்யேக வலைதளம் ஒன்றை கூகுள் நிறுவனம் உருவாக்கியிருப்பதாக அவர் அறிவித்தார்.
ஆனால் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் கூகுள் நிறுவனம் இந்தத் தகவலை மறுத்தது. அதுபோன்று எந்த ஒரு வலைதளமும் கூகுள் சார்பில் உருவாக்கப்படவில்லை எனக் கூறியது. அதே சமயம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் குழுமத்தில் ஒரு அங்கமாக விளங்கும் வெர்லி அமைப்பு இது போன்ற வலைத்தளத்தை உருவாக்கி இருப்பதாகவும், அந்த வலைத்தளம் கலிபோர்னியா மாகாணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் வலைதள குழப்பங்கள் அனைத்தும் போலி ஊடகங்களால் ஏற்பட்டதாகக் கூறினார். மேலும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியதாகவும் கூறினார். ஆனால் எதற்காக, மன்னிப்பு கோரினார் என்பதை அவர் விளக்கவில்லை.
அதே சமயம் கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை மரியாதைக்குரிய நபர் என்றும் சிறந்த மனிதர் என்றும் அவர் கூறினார்.
