“கொடுக்காபுளி சாப்பிட்டா கொரோனா வராது!.. இத பண்ணி பாருங்க.. அப்றம் மரணமே வராது” - புதுவை எம்.எல்.ஏ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழகத்திலும் ஓமனில் இருந்து வந்து ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், அவரும் தற்போது குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கும் நிலையில், கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராது என்று புதுவை எம்.எல்.ஏ கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் ஜெயராம் திருமண மண்டபத்தில் மகளிர் தினவிழா நடந்தது. இதில் ஜான்குமார் எம்.எல்.ஏ வாழ்த்தி பேசினார். அப்போது, ‘உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இதனைத் தடுக்க எளிய வழிமுறைகள் உள்ளன. கொடுக்காபுளி அல்லாது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது’ என்று கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், ‘பழைய சோறும் பழவகைகளும் தினமும் சாப்பிட்டாலே கொரோனா மட்டுமல்லாமல், மரணம் கூட நமை நெருங்காது’ என்றும் தவிர, ‘தினந்தோறும் காலையில் அரைமணி நேரம் மாலை அரைமணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
