‘ஏம்பா.. இதெல்லாம் எப்படி கொரோனாவ கட்டுப்படுத்தும்?’.. ‘என்னப்பா நீங்க இப்படி பண்றீங்களேப்பா!’.. உலக சுகாதார மையம் வேண்டுகோள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 09, 2020 10:16 AM

உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் எண்ணிக்கை 3,500-ஐத் தாண்டிய நிலையில், இத்தாலியில் 16 கோடி மக்கள் கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய நிலவரப்படி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Sun light is not preventing corona virus, says WHO

இந்நிலையில் கைச்சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம், இருமல் மற்றும் தும்மலின்போது அடுத்தவருக்கு பரவாமல் பார்த்துக்கொள்வது என கொரோனா விழிப்புணர்வினை சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கொரோனாவை தடுப்பதற்கான நம்பிக்கைகளாக பல நம்பிக்கைகள் முளைத்துள்ளன. குறிப்பாக வெயில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என்கிற நம்பிக்கையை உலக சுகாதார மையம் முற்றாக மறுத்துள்ளது.

இதுபற்றி அறிவித்துள்ள உலக சுகாதார மையம், உலகம் முழுவதும் கட்டுப்பாடின்றி கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் இந்த நேரத்தில் நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் கொரோனா பரவால் தடுப்பதற்கான புத்திசாலித்தனத்துடனேயே அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வெயிலால் கொரோனா பரவாது என்பன போன்ற கருத்துக்களை நம்பி அலட்சியமாக செயல்பட்டு கொரோனா பரவுவதற்கு வழிவகுத்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : #WHO #COVID2019 #COVIDー19 #CORONAVIRUSUPDATE #CORONAVIRUSOUTBREAK #CORONAVID19