‘ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு’... ‘திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி புதிய தகவல்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சுறுத்தலால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, முன்பதிவு செய்த 300 ரூபாய் டிக்கெட்டை ரத்து செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![Special Entry Darshan tickets can be cancelled due to Corona impact TT Special Entry Darshan tickets can be cancelled due to Corona impact TT](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/special-entry-darshan-tickets-can-be-cancelled-due-to-corona-impact-tt.jpeg)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் 76 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு முதன்முதலாக இந்தியாவில் உயிரிழந்தநிலையில், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் பக்தர்கள் அதிகம் கூடும் வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பதி கோயிலில், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துகொள்ளலாம் என தேவஸ்தான கூறியுள்ளது. பக்தர்கள் மே மாதம் வரை முன்பதிவு செய்த ரூ.300 தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்துகொள்ளலாம் என்றும், தரிசனத்தை வேறு தேதியில் முன்பதிவு செய்துகொள்ளவும் ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதிக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அத்துடன் வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாட்டினர் ஆகியோர் திருப்பதி வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)