‘இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது.. நானும் வரமாட்டேன்!’.. கொரோனா பீதியால் ‘சலூன் கடை ஊழியர்கள்’ எடுத்த முக்கிய முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 07, 2020 06:25 PM

கொரோனா வைரஸ் எதிரொலி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் பரவிவிடாமல் இருக்க கைகுலுக்குவதை, கட்டிப்பிடிப்பதை, முத்தம் பரிமாறிக்கொள்வதை எல்லாம் தவிர்க்கச் சொல்லி ஒவ்வொரு நாடும் அறிவுறுத்தி வருகின்றன.

coronavirus outbreak in China ‘Long-distance’ haircut goes viral

எனினும் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காகவும், கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், மாஸ்க்குகளை முகத்தில் அணிந்து பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால் சீனாவின் சலூன் கடைகளில் ஒரு படி மேலே போய் பாதுகாப்புக்காக சலூன் கடைக்காரர்கள், நீளமான கொம்புகளின் நுனியில் கத்திரிக்கோலை பொருத்துவைத்துவிட்டு, தூரத்தில் இருந்து முடிவெட்டும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

என்னதான் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தாலும் நெருக்கமாக நிற்பது அவ்வளவாக நல்லதல்ல என கருதும் இந்த முடி திருத்தும் ஊழியர்கள் கஸ்டமரிடம் இருந்து எவ்வகையிலும் தங்களுக்கு கொரோனா தொற்றிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில் தள்ளியே நின்று முடிவெட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல்களை சீனா வலைதளமான சவுத் சைனா மார்னிங் போஸ்ட், தனது இணையத்தில் பகிர்ந்துள்ளது.

Tags : #CHINA