'ஃபுல் செக்கப் பண்ணியாச்சு...' 'ஜப்பானில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...' 'அவரது 'ரிப்போர்ட்' குறித்த புதிய தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 05, 2020 12:48 PM

ஜப்பானில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

a boy from Japan have been infected with the coronavirus

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தற்போது 29-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி ஜப்பானில் இருந்து மாணவர் ஒருவர் சிங்கப்பூர் வழியாக கோவை வந்தார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. பின்னர் கரோனா வைரஸ் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை  என்பது உறுதி செய்யப்பட்டது.

இப்போது அந்த நபர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 28 நாட்கள் வெளியே வரக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : #CORONAVIRUS