'ஃபாரின் ரிட்டர்ன்' எல்லாம்... 'வீட்டுக்குள்ளேயே இருக்கனும்...' 'மீறினால் பாஸ்போர்ட் ரத்து...' வீடுகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டி 'கண்காணிப்பு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 23, 2020 05:35 PM

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்லிருந்து திரும்பியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் அத்தகைய நபர்கள் உள்ள 3 ஆயிரம் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If foreign returns have left home those passport will be disabled

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளிலில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அவர்களை காவல்துறை முழுமையாக கண்காணித்து வருவதாகவும், உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே சென்றால் காவல்துறை மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தரவை மீறுபவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 ஆயிரம் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் என்றும் அவர்கள் வெளியில் வந்தால் அரசுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 3 ஆயிரம் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட 9 ஆயிரத்து 424 பேரின் இல்லங்களில் விரைவில்  ஸ்டிக்கர் ஒட்டும் பணி நிறைவுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONA #FOREIGN RETURNS #LEFT HOME #PASSPORT #DISABLED