"முருகா, கந்தா, கடம்பா... என்னைய மட்டும் காப்பாத்து..." "ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல..." "12 மாஸ்க் போட்டிருக்கேன்..." "கொரோனா கிட்ட கூட வரக்கூடாது..." 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 07, 2020 11:52 AM

கொரோனா வைரஸில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சீனர் ஒருவர் தனது முகத்தில் 12 மாஸ்க் அணிந்து கொண்ட செயல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

A Chinese man wore a 12 mask on his face to protect himself

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 630 - ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள சீனர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இதற்கிடையே சீன ஓட்டுநர் ஒருவர் தனது முகத்தில் 12 மாஸ்க் அணிந்து கொண்ட செயல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

 

இந்த விடியோவை சீனாவை சேர்ந்த South China Morning Post என்ற செய்திநிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சீனாவில் வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டுநரிடம் வைரஸ் தாக்குதல் தொடர்பான வெப்பநிலை பரிசோதனைக்காக மாஸ்க்கை சீன போலீசார் அகற்ற கூறிய போது அவர் ஒன்றன் பின் ஒன்றாக 12 மாஸ்கை கழற்றியது வேடிக்கையாக இருந்தது.

இதனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், வைரஸ் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவே இவ்விதம் அவர் செய்ததாக இந்த வீடியோவில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags : #CORONA #VIRUS #CHINA #12 MASK #TRENDING VIDEO