‘ரன் எடுக்கும்போது’... ‘நடுவழியில் நியூசிலாந்து வீரர் நின்றதால்’... ‘எழுந்த வாக்குவாதம்’... ‘சிறு புன்னகையுடன் கடந்த கே.எல் ராகுல்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 11, 2020 04:35 PM

ரன் எடுக்க ஓடும்போது நடுவழியில் நியூசிலாந்து வீரர் நின்றதால், மோதல் ஏற்படும் என்ற நிலையில் அதன கேஎல் ராகுல் சிறு புன்னகையுடன் கடந்து சென்றார்.

KL Rahul, Jimmy Neesham involved in argument in 3rd ODI

5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியை இந்திய அணி வாஷ் அவுட் செய்து வெற்றிபெற்றது. இதனைப் பழிதீர்க்கும் வகையில் மவுண்ட் மவுங்கனியில் இன்று நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்றது.

இந்நிலையில், போட்டியின்போது 20-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தது. அப்போது கேஎல்ராகுலும், ஸ்ரேயாஸ் அய்யரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த ஓவரின்போது கவனம் ஈர்த்த ஒரு விஷயம் என்னவென்றால், நீஷம் வீசிய அந்த ஓவரில் ஒரு ரன் எடுக்க கேஎல் ராகுல் ஓடினார். ஆனால் வழியில் நின்ற நீஷம் ரன்கள் எடுக்காதவாறு நின்றதால், அவரை தவிர்த்துவிட்டு, கேஎல் ராகுல் ஒரு ரன் எடுக்க ஓடினார்.

பின்னர், நீஷமிடம் வந்து ராகுல் கேட்க, அப்போது வாக்குவாதம் முற்றப்போவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் அதனை சிறு  புன்னகையுடன் கடந்த சென்ற ராகுலை மீண்டும் நீஷம் முழங்கையால் தட்டிவிட்டுச் சென்றார். இதனையும் சிறு புன்னகையுடன் ராகுல் கடக்க அங்கு மோதல் உருவாகாமல் போனது. கே.எல்.ராகுலின் செயலைக் கண்ட ரசிகர்கள் அவரை பாராட்டினர். வரவிருக்கும் ஐபில் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையில் விளையாடும் பஞ்சாப் அணியில், நியூசிலாந்து வீரர் நீஷம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Untitled from Cricket Fan on Vimeo.

Tags : #KLRAHUL #CRICKET #NZVIND #ODI #3RD