'தமிழகத்தில்' 6 மாநகராட்சிகளில்.. 'அமலுக்கு வந்த' 4 நாள் முழு ஊரடங்கு!.. கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் தீவிரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 26, 2020 08:43 AM

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை உட்பட 6 மாநகரங்களில் நான்கு நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

tamilnadu complete lockdown against corona in 6 Cities started

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பகுதி நேர தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்து வந்த நிலையில், கொரோனா அதிகம் பாதித்த மற்றும் ஜன நெரிசல் கொண்ட, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை தாம்பரம், பல்லாவரம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், பொன்னேரியில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.