'போய்ட்டு நிதானமா வாங்க சார்’..கஸ்டமரை ஏர்போர்ட்டில் டிராப் செய்துவிட்டு கேப் டிரைவர் பார்த்த வேலை!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Apr 11, 2019 12:15 PM
கேப் டிரைவர் ஒருவர் பயணியை ஏர்போர்ட்டில் டிராப் செய்துவிட்டு, அந்த பயணியின் வீட்டுக்குச் சென்று திருட முற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் பயணியர் ஒருவர், தான் வெளியூர் பயணம் செல்லும் நிமித்தமாக பிரபலமான கேப் நிறுவனமான யூபர் கேபினை புக் செய்திருக்கிறார். சில மணித்துளிகளிலேயே யூபர் கேப் பயணியரிடம் வந்தடைந்து, பிக்-அப் செய்துள்ளது. பிக்-அப் செய்த சில நிமிடங்களிலேயே பயணியரிடம் பேச்சு கொடுத்து வந்த யூபர் டிரைவர் ஜாக்கி வில்சன், பயணியரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
குறிப்பாக தன் கேபில் ஏறியுள்ள பயணியர், வேலை நிமித்தமாக வெளியூர் செல்வது, அதற்காக ஏர்போர்ட் செல்வது, ஆக ஓரிரு நாட்களுக்கு வீட்டில் இருக்க மாட்டார் என்பது உள்ளிட்ட சில தகவல்களை லாவகமாக போட்டு வாங்கியுள்ளார். அதன் பிறகுதான் யூபர் கேப் டிரைவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். தான் ஏற்றிச் சென்ற பயணியரின் வீட்டுக்குச் சென்று கொள்ளையடித்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதனால் பயணியரை ஏர்போர்ட்டில் டிராப் செய்துவிட்டு சற்றும் தாமதிக்காமல், அந்த பயணியரின் வீட்டுக்குச் சென்றுள்ளார் யூபர் கேப் டிரைவர். அப்போது பயணியின் வீட்டில் இருந்த சிசிடிவி புதிய நபரை அடையாளம் கண்டுபிடித்துவிட்டதால், தனது முதலாளியான பயணிக்கு விசுவாசமாக இருக்கும் வகையில் அப்டேட் செய்து அலார்ட் செய்துள்ளது. மேலும் வீட்டில் சிறப்பு சத்தத்தையும் போட்டுள்ளது.
இதனால் அக்கம் பக்கத்தினரும் வெளிவந்து பார்த்துள்ளனர். இதனிடையே பயணியர், தனது பக்கத்து வீட்டாருடன் தொடர்பு கொண்டு, தன் வீட்டுக்கு யார் வந்துள்ளார்கள் என கேட்கவும், அவர் கேப் டிரைவர் என்று சொல்லவும், அதற்குள் கேப் டிரைவர் தப்பித்துள்ளார். ஆனால் அவரது வண்டி நம்பரை நோட் பண்ணி போலீஸாரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் போலீஸார் அந்த கேப் டிரைவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இதற்கு ரெஸ்பான்ஸ் செய்துள்ள யூபர் நிறுவனம் தமது ஒப்பந்த ஊழியரின் இந்த முறைகேட்டினால் அவரை நீக்கம் செய்துள்ளதாகவும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க ஆவன செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.