'சேலையை கட்டி கொண்டு தற்கொலை செய்த மாணவர்'...அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 11, 2019 11:13 AM

கோவை அருகே தனியார் கல்லூரி மாணவர் பெண் போல வேடமணிந்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore college committed suicide in college hostel

கேரள மாநிலத்தை சேர்ந்த எபின் ராபர்ட் என்பவர் மேட்டுப்பாளையம் அடுத்த மத்தம்பாளையத்தில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில்  எந்திரவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.இதனால் சக மாணவர்களுடன் அதிகமாக பழகாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.மேலும் அறையில் யாரும் இல்லாத வேளையில் பெண்கள் அணியும் ஆடை, அணிகலன்களை எபின் அணிந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் கல்லூரி தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில், எபின் ராபர்ட் தனது அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இது விடுதி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்கொலை செய்யும் முன், எபின் புடவை அணிந்திருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் எபினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 'பெண்ணாக மாற வேண்டும் என எண்ணி எபின் மிகும் மன அழுத்தத்தில் இருந்ததாக' தெரிவித்தனர்.இருப்பினும் அவர் வேறு ஏதாவது காரணங்களால் பாதிக்கப்பட்டாரா அல்லது சக மாணவர்களுடன் ஏதாவது பிரச்சனையா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.

Tags : #KERALA #COIMBATORE #SUICIDE