‘நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவிக்கு சித்ரவதை’.. கணவனின் கொடூரம்.. மனைவி எடுத்த முடிவால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 05, 2019 05:53 PM

நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband shaved his wife\'s hair for not dancing for his friends

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மியான் பைசல். இவரது மனைவி அஸ்மா ஆஸிஸ்.இவர்கள் லாகூர் நகரில் வசித்து வந்துள்ளனர். சில நாள்களுக்கு முன்பு அஸ்மா ஆஸிஸ் தலையில் மொட்டை அடித்த நிலையில் முகத்தில் காயங்களுடன் ஒரு பரபரப்பான வீடியோவை ஒன்றை வெளியிட்டார்.

அதில் தனது கணவரின் நண்பர்கள் முன்னிலையில் தான் ஆட மறுத்ததால் அவர் அடித்து துன்புறுத்தியாதாக கூறியிருந்தார். மேலும் தனது ஆடைகளை வீட்டு பணியாளரின் முன்னிலையில் அகற்றி, பின்னர் தனது தலை முடியை வழுக்கட்டாயமாக வெட்டி, ஆடையுடன் சேர்த்து தீயிட்டு கொழுத்தியாதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலிஸார் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த வீடியோ பதிவை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆஸ்ஸின் கணவர் மற்றும் பணியாளரை போலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் ஆஸ்ஸி கூறும் குற்றசாட்டை அவரது கணவர் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Tags : #ASMAAZIZ #HUSBAND #BIZARRE