'துரத்திய புற்றுநோய், பறிபோன கர்ப்பப்பை'...'ஆயிரம் கனவுகளோடு மணமேடையை நோக்கி வந்த பெண்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 29, 2020 12:56 PM

திருமண நாள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். அந்த திருமண நாளில் மண பெண்ணுக்கு நடந்த துயர சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அதன் இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Bride who suffers daily seizures collapses in her husband\'s arms

வேல்ஸின் Rhymney Valley பகுதியைச் சேர்ந்தவர் Hayley Hale. இவர் மாத்தியூ என்ற இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. தேவாலயத்தில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மணப்பெண் Hayley Hale மனமேடையை நோக்கி நடந்து வந்தார். அப்போது காதலன் மாத்தியூ அவரை பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

Bride who suffers daily seizures collapses in her husband's arms

இதனிடையே Hayley Hale மணமேடையை அடைந்த நிலையில், திடீரென சரிந்து விழுந்தார். திருமணத்திற்கு வந்த அனைவரும் இதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். ஒரு கணம் அந்த இடமே நிசப்தமானது. Hayleyயின் காதலன் மாத்தியூ அவரை தாங்கி பிடித்த நிலையில், மணப்பெண்ணின் பெற்றோர் ஓடி வந்தார்கள். ஒரு நிமிடம் அனைவரும் ஆடிப் போன நிலையில் சில நிமிடங்கள் கழித்து Hayley கண்விழித்துப் பார்த்தார். அப்போது Hayleyயை அவரது காதலன் மாத்தியூ தாங்கி பிடித்துக் கொண்டு இருந்தார். உடனே, Hayley எனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன் என, சத்தமிட்டார். அப்போது தான் அங்கிருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

Bride who suffers daily seizures collapses in her husband's arms

Hayleyயின் வாழ்க்கை பல சோகங்களைக் கொண்டது. புற்று நோயுடன் போராடிய அவர், அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், தனது மார்பகங்களையும், கர்ப்பப்பையையும் இழந்தார். இதனால் பல்வேறு துயரங்களுக்கு ஆளான அவருக்கு அவ்வப்போது வலிப்பும் வரத் தொடங்கியது. இதனால் திருமணம் செய்து கொள்ளப் பயந்த அவர், எப்போது வலிப்பு வருமோ என்ற பயத்திலேயே தனது திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார்.

Bride who suffers daily seizures collapses in her husband's arms

இருப்பினும் Hayleyயை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்த காதலன் மாத்தியூ, அவரை சமாதானம் செய்து திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். ஆனால் Hayley பயந்தது போலத் திருமண நாளில் வலிப்பு வந்தது. ஆனால் காதலன் கொடுத்த தைரியத்தால் அதனையும் வென்று புது வாழ்க்கையைத் தொடங்க Hayley தயாராகிவிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride who suffers daily seizures collapses in her husband's arms | World News.