'அலைபாயுதே' பட பாணியில் நடந்த கல்யாணம்.. க்ளைமாக்ஸ் மாதிரி 'திருமண மண்டபத்தில்' நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்த ஷாமிலி என்கிற 23 வயது பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ஷாமிலிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இவர்களது பெற்றோர் கடந்த 14-ஆம் தேதி திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி 13ஆம் தேதி மாலை நடந்தது. அதில் மணமகனின் அருகில் மணப்பெண் ஷாமிலி அலங்காரத்தில் வந்து நிற்க இரு வீட்டு உறவினர்களும் வாழ்த்திக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிகளில் வருவது போல போலீசுடன் வந்த இளைஞர் ஒருவர் ஷாமிலி தான் தன்னுடைய மனைவி என்றும் அவருக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் தற்போது ஷாமிலிக்கும் கட்டாயத் திருமணம் நடப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் மண்டபமே ஒரு கணம் அதிர்ந்து ஷாக் ஆகி நிற்க பின்னர் விசாரணையில் தன்னுடன் படித்து வந்த ராஜ் என்பவரை காதலித்ததை ஒப்புக் கொண்ட ஷாமிலி கடந்த செப்டம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார். மேலும் திருமணம் முடிந்த கையோடு அலைபாயுதே படத்தில் வருவது போல இருவரும் அவரவர் வீட்டில் வசித்துள்ளனர். இதற்கிடையில் ஷாமிலிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க, ஆனால் ஷாமிலியோ தனக்கு திருமணம் நடந்ததை வீட்டில் சொல்லாமல் பயத்தில் புதிய திருமணத்திற்கு சம்பாதித்துள்ளார்.
இதற்கிடையே ல் ராஜ் இ-பாஸ் பெற முயற்சித்தும் பலனில்லாமல் போனது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இருவரும் மேஜர் என்பதால் ஷாமிலி மேஜர் என்பதால் ராஜுடன் போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டார்.

மற்ற செய்திகள்
