'புதுப்பெண்ணை அருகில் உட்கார வைத்துவிட்டு'.. மடிக்கணியை எடுத்து மாப்பிள்ளை பார்த்த வேலை.. 'தெறிக்கவிட்ட' வைரல் ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது திருமணத்தில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு புதுமணமகன் ஒருவர் ஃபுட்பால் மேனேஜர் வீடியோ கேம் விளையாடி அதிரவைத்துள்ளது. தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றான திருமணத்தன்று புதுமணப்பெண்ணை ஓரமாக உட்காரவைத்துவிட்டு வீடியோ கேம் விளையாடியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த புராக் என்பவர்,தான் திருமணம் செய்யும் மணப்பெண்ணுக்காக ஒரு "சிறப்பு வீடியோ"வை உருவாக்குவதற்காக திட்டமிட்டு திருமண விழாவிற்கு தனது மடிக்கணினியை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் தொழில்நுட்ப சிக்கல்களால் வீடியோவை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், அந்த 28 வயதான மணமகன் தனக்கு பிடித்த ஃபுட்பால் மேனேஜர் வீடியோ கேம் விளையாட்டை தொடர்ந்து விளையாட முடிவு செய்தார். அருகில் தனது மணமகள் அமைதியாக அமர்ந்திருக்கும்போது அவர் லேப்டாப்பில் வீடியோ கேம் விளையாடும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இதுபற்றி பேசிய மணமகன், "எங்கள் உறவின் கதையைப் பற்றி ஒரு சிறப்பு வீடியோவைத் தயாரிக்க எண்ணி எனது கணினியை என்னுடன் திருமணத்திற்கு கொண்டு வந்தேன், ஆனால் அந்த வீடியோவின் அளவு மிகப்பெரியது என்பதால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் உருவானது. அதனை 30 நிமிடங்களில் சரிசெய்வதாக எனது திருமண அமைப்பாளர்கள் கூறியதால், நான் எனது மடிக்கணினியை எடுத்து 'நகைச்சுவையாக' கால்பந்து மேலாளரைத் தொடங்கினேன். நான் ஒரு கப் விளையாட்டு, ஒரு லீக் விளையாட்டை முடித்துவிட்டு, பின்னர் கணினியை மூடிவிட்டேன், இல்லையேல் எனது புதுமணமகள் எனது லேப்டாப்பை சேதப்படுத்தியிருக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.
மேலும் "அவள் இந்த கேமை விரும்புகிறாளா இல்லையா என்று சொல்வது கடினம். நான் ஒரு வாரத்தில் 3-4 மணிநேரமும் வார இறுதியில் 6-7 மணிநேரமும் விளையாடுவேன்" என்று புராக் சொன்னதும், இந்த கேமின் ரசிகர்கள் பலரும் புராக்கின் சின்சியாரிட்டிக்கு தலைவணங்குவதாக தெரிவித்து புகழாரம் சூட்ட ஆரம்பித்தனர்.

மற்ற செய்திகள்
