"திருமணம் முடிஞ்சாச்சு.. அடுத்து என்ன?".. கேக், வைன், கணவருடன், காரில் ஏறிய புதுப்பெண்... 300 கி.மீ பயணம் செய்த பின் செய்த நெகிழ்ச்சி காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 24, 2020 01:21 PM

கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுக்க மக்கள் திருமணங்களை எளிமையாக நடத்திவருவதுடன், தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரலாம் என்பதாக் சுப நிகழ்வுகளில் கூடுவதையும் பங்குகொள்வதையும் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் திருமணக் கோலத்தில் தன் தாத்தா தன்னை காண வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றுவதற்காக  பலரது கவன ஈர்ப்பையும் பெற்றுள்ளது.

bride drives over 300 km to see grandfather this is the reason

லண்டனில் கிரஹாம் பர்லி எனும் முதியவர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தில் இந்தச் சூழலில் நடக்கும் சுப காரியமாக, அவரது பேத்திக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தூரத்தில் நடக்கும் தனது செல்ல பேத்தியின் திருமணத்துக்கு பயணம் செய்து கலந்துகொள்ள முடியாத அளவில் ‘பார்கின்சன்’ என்கிற நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், மணப்பெண்ணும் அவரது பேத்தியும் அறுவை சிகிச்சை நிபுணருமான அலெக்ஸ் பியர்ஸ் (36) தனது தாத்தா தன் திருமணத்தை காண முடியாத ஏமாற்றத்தை அடைந்துவிடக் கூடாது என்பதற்காக,   கேக்கையும் வைனையும் எடுத்துக்கொண்டு, தனது கணவருடன் திருமண உடையில் தாத்தாவைக் காண கிட்டத்தட்ட 320 கி.மீ. பயணம் செய்து தாத்தாவைச் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத தாத்தா இருவரையும் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் திளைத்ததுடன் ஆனந்தக் கண்ணீர் விட்டபடி நெகிழ்ந்துள்ளார். பொதுவாக மணப்பெண்கள் திருமணமானதும், கையோடு தேனிலவுக்கோ தங்களின் புகுந்த வீட்டிற்குகோ போவது வழக்கம். இந்நிலையில் தனது பிரியத்துக்குரிய தாத்தாவுக்காக  அலெக்ஸ் பியர்ஸ் செய்துள்ள இந்த காரியம் வைரல் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride drives over 300 km to see grandfather this is the reason | World News.