‘முதலிரவில் தகராறு’!.. புதுமாப்பிள்ளை கையிலெடுத்த விபரீதம்.. கல்யாணம் ஆன ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுமணப் பெண்ணை முதலிரவில் கணவனே கடப்பாறையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ரெட்டிபாளையம் அடுத்த சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நீதிவாசன். இவருக்கும் சடையங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்ற இளம்பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலியே எளிமையாக திருமணம் நடந்தது.
இதனை அடுத்து நடந்த முதலிரவின் போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நீதிவாசன், புது மனைவியை கடப்பாறை கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் புதுமணப்பெண் சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நீதிவாசனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் தோப்பு ஒன்றில் உள்ள வேப்பமரத்தில் நீதிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வந்த போலீசார் நீதிவாசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன அன்றே புதுமணப்பெண்ணை கொலை செய்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
