“முதலிரவை தவிர்த்துக் கொண்டே வந்த அமெரிக்க மாப்பிள்ளை!”.. உறையவைத்த காரணம்.. அதன் பின் புதுப்பெண்ணுக்கு கணவர் போட்ட ‘அரளவைக்கும்’ கண்டிஷன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான பாஸ்கர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பணிபுரிந்து வந்தார்.

இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய, குண்டூரைச் சேர்ந்த 25 வயது பெண்ணை நிச்சயம் செய்து, திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து அமெரிக்க மாப்பிள்ளை பாஸ்கருக்கும், குண்டூர் பெண்ணுக்கும் நெருங்கிய உறவுகள், நட்பு வட்டம் சூழ எளிய முறையில் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 70 சவரன் நகைகளை பெண் வீட்டார் வழங்கினர். ஆனால் முதலிரவில், அந்த அமெரிக்க மாப்பிள்ளை பாஸ்கரோ, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி தூங்கியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும், புதுமணப்பெண்ணிடம் ஒரு காரணத்தைச் சொல்லி உறங்கியுள்ளார்.
ஒன்றரை மாதங்களாக தாம்பத்தியம் இல்லாமல், இருந்த அந்த புதுப்பெண், தனது தோழிகள் மற்றும் பெற்றோரிடம் கூற, அவர்கள் பாஸ்கரின் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் பாஸ்கரின் குடும்பத்தினர், பாஸ்கரிடம், ‘இந்த திருமணத்தில் உடன்பாடில்லையா அல்லது இந்த பெண்ணை பிடிக்கவில்லையா?’ என அதட்டி கேட்க, அப்போதுதான் பாஸ்கர், அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் 4 வருடங்களால நல்ல புரிதலுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும், தனக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இல்லை என்றும் கூறி அதிரவைத்துள்ளார்.
இதனால் விரக்தியில், புதுப்பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட, மீண்டும் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு, தனது மனைவியை தனியாய் அழைத்துச் சென்று பேசிய பாஸ்கர், தன்னுடன் வாழ விரும்பினால் அமெரிக்கா அழைத்துச் செல்வதாகவும், அங்கு தன்னுடன் குடும்பம் நடத்தி வரும் தனது ஆண் நண்பருக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை விதித்துள்ளார். இதனால் அதிர்ந்த புதுப்பெண்ணின் பெற்றோர் குண்டூர் புறநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, பாஸ்கர் மற்றும் அவரது பெற்றோர் மீதுவழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
