மாளிகை முழுவதும்... உலகின் விலையுயர்ந்த 'ஈவியன்' குடிநீரை நிரப்பிய கோடீஸ்வரர்... வெலைய 'கேட்டாலே' மயக்கம் வருது!
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னுடைய மாளிகை முழுவதும் உலகின் விலையுயர்ந்த ஏவியன் குடிநீரை நிரப்பி இருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் கோடீஸ்வரர் ஒருவரின் செயல் கவனம் ஈர்த்துள்ளது. அமீரக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சுமார் 500 கோடி மதிப்புடைய தன்னுடைய மாளிகை தண்ணீர் தொட்டியில் உயர் ரக ஈவியன் குடிநீரை நிரப்பி உள்ளார்.
இதற்காக ஈவியன் குடிநீர் பாட்டில்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் மட்டும் இவருக்கு 5.19 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. லண்டனில் உள்ள 18-ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த மாளிகைக்கு வருடத்துக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே வந்து தங்கி செல்வாராம். அதற்காக இந்த குடிநீரை அவர் நிரப்பி இருக்கிறார். ஒரு லிட்டர் ஈவியன் குடிநீரின் விலை 600 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.