"எப்படி வண்டிய எடுக்குறீங்கனு பாக்குறேன்!"..'தாய்ப்பாசத்தால் இளைஞர் செய்த காரியம்!'.. கைகலப்பு சம்பவம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 23, 2020 07:45 PM

கோவையில் தனது தாயை அவதூறாக பேசியதால் காவலர்களின் வாகன சாவியை எடுத்துக்கொண்ட 10ஆம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் அடித்து இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

TN school student seized police bike key video

தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும்  மகனுடன் இரவு டிபன் கடை நடத்தி வந்தவர், கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வரும் வேல்மயில் என்பவர், இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் கடை நடத்திய போது, அங்கு ரோந்து பணியில் இருந்த  உதவி ஆய்வாளர் செல்லமணி கடையை உடனடியாக மூடும்படி  அறிவுறுத்தியதாகவும்,ஆனால் வேல்மணியும் அவரது மனைவியும் கடையை எடுக்காமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் உதவி ஆய்வாளர் செல்லமணி, அவர்களின் செல்போனை பிடுங்கிக் கொண்டதாகவும், உடனடியாக கடையை காலி பண்ண வேண்டும் என்றும் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் தனது பெற்றோரை காவல்துறையினர் ஒருமையில் பேசுவதை கண்டு ஆவேசமடைந்த பள்ளி மாணவர், உதவி ஆய்வாளர் செல்லமணியின்  இருசக்கர வாகன சாவியை பிடுங்கிக் கொண்டதால்,  போலீசாருடன் கைகலப்பு உண்டாக, அந்த பள்ளி மாணவனை போலிஸ் வாகனத்தில் ஏற்றி, இரத்தினபுரி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் மாணவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து மாணவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தபோது, மாணவர் சராசரியாக படிக்க கூடியவர்,  பெற்றோர் மீது  பாசம் கொண்டவர் என்பதெல்லாம் தெரியவர, பின்னர் உயர் அதிகாரிகளின் அறிவுரையின்  பேரில், பள்ளி மாணவனின் எதிர்காலம் கருதி, மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு காவல்துறையினர் மாணவரை விடுவித்தனர்.  அதேசமயம் பள்ளி மாணவனின் தந்தை வேல்மயில் மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துவதாக ( IPC 75) சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துவிடுவித்தனர்.  இந்த சம்பவம், வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN school student seized police bike key video | Tamil Nadu News.