‘வயாகரா கலந்த நீரை குடித்த செம்மறி ஆடுகள்’!.. ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 80,000 ஆடுகள்’.. மிரளவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Dec 11, 2019 04:29 PM

அயர்லாந்தில் தவறுதலாக வயாகரா கலந்த கழிவு நீரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sheep crazy sex run after drinking water contaminated by viagra

அயர்லாந்தின் தெற்கு பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் தங்களது செம்மறி ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவதைக் கண்டு குழம்பம் அடைந்துள்ளனர். அனைத்து ஆடுகளும் பாலியல் வெறி பிடித்ததுபோல் நடந்துகொள்வதாக ஆடு மேய்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஆடுகள் குடித்த நீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அப்போது ஆடுகள் குடித்த நீரில் வயாகரா கழிவுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த கழிவுகளை ஃசைபர் என்ற மருத்து உற்பத்தி ஆலை 755 டன்னுக்கும் அதிகமான வயாகரா கழிவுகளை ரிங்காஸ்கிடி துறைமுகத்தில் கொட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயாகரா கழிவு கலந்த நீரை சுமார் 80,000-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் குடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஆடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #VIAGRA #WATER #SHEEP #IRELAND