பைக் மீது மோதிய கார்.. "கீழ விழுந்த வேகத்துலயே எந்திரிச்சு போய்.." இளைஞர் செய்த விஷயம்.. "இப்டி எல்லாம் பாத்ததே இல்லப்பா"
முகப்பு > செய்திகள் > உலகம்உலகை சுற்றி நடக்கும் பல வினோதமான அல்லது அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகும்.

Also Read | "காதலி'ய பழி வாங்குறதுக்காக இப்படியா பண்ணுவே??.." சிக்கித் தவித்த 7 அப்பாவிகள்.. காட்டிக் கொடுத்த 'CCTV'..
அதிலும் குறிப்பாக, சாலையில் நிகழும் வாகன விபத்து தொடர்பான வீடியோக்கள், சிசிடிவியிலோ, அல்லது வேறு வாகனத்தில் உள்ள கேமராக்கள் மூலமோ வெளியாகி, மக்கள் மத்தியில் ஒரு வித பீதியைக் கூட ஏற்படுத்தும்.
இதில், சில நேரத்தில் பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில், போக்குவரத்து விதி மீறல்கள் காரணமாக, இரண்டு வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை கொடுக்கும் சம்பவங்களையும் நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
பைக் மீது மோதிய கார்
அந்த வகையில், சாலையில் வைத்து விபத்து ஒன்று நிகழவே, இதன் பின்னர் அதே சாலையில் வைத்து நடந்த சம்பவம் ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது. தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்த கார் மோதி, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், சாலை அருகே விழுந்து கிடக்கிறார்.
இதனையடுத்து, பெரிய அளவில் அந்த இளைஞருக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில், அங்கிருந்து எழுந்த இளைஞர், காரை ஓட்டி வந்த இளம்பெண்ணை நோக்கி நடந்து செல்கிறார். மறுபக்கம், தான் ஓட்டி வந்த கார், விபத்துக்கு காரணமாக இருந்ததால் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் அந்த இளம்பெண்.
கட்டியணைத்து தேற்றிய இளைஞர்
அவர் அருகே சென்ற இளைஞர், இளம்பெண்ணை கட்டியணைத்து, முதுகில் தட்டிக் கொடுத்து தேற்றவும் செய்கிறார். தொடர்ந்து, அந்த பெண்ணிடம் பேசிய இளைஞர், அவரை சமாதானம் செய்து ஒன்றும் நிகழவில்லை என்பது போல கூறி தேற்றுகிறார். இந்த விபத்து நடந்த இடத்தின் அருகே காரில் இருந்த ஒருவர், இது தொடர்பான வீடியோவை எடுத்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.
விபத்துக்கு காரணமாக இருக்கும் நபரை சக வாகன ஓட்டி, வசை பாடும் நிகழ்வுகளை நிறைய பார்த்த நமக்கு, இந்த இளைஞரின் செயல் வியப்பாக உள்ளது என பலரும் இந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், அந்த இளைஞரின் உள்ளத்திற்காக, பலரும் ஹார்டினை அள்ளி விட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
