பொருளை வித்தா கமிஷன்...வாட்சப்பில் வலை.. ஆசையாக முதலீடு செய்த வாலிபருக்கு வந்த சோதனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்யலாம் எனக் கூறி ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து 2.54 லட்ச ரூபாயை சுருட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

"இனி சாதிப் பெயரே வேணாம்".. பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை ..அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
சமூக வலை தளங்களில் நம்முடைய வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. கண் இமைக்கும் நேரத்தில் நம்மால் உலகின் அடுத்த மூலையில் இருப்பவரோடு பேச முடிகிறது. அதற்கு இந்த சமூக வலைத் தளங்கள் முக்கிய காரணம். ஆனால், இதன் மூலமாக மோசடி வேலையில் ஈடுபடும் கும்பலும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு கும்பலிடம் தான் பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கிறார் ஈரோடைச் சேர்ந்த சுதர்சன் என்னும் இளைஞர்.
வேலை
ஈரோடு மாவட்டத்தின் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுதர்சன். 20 வயதான இவர் சமூக வலை தளங்கள் வாயிலாக வேலை தேடிவந்திருக்கிறார். அப்போது சுதர்சனுக்கு பழக்கமான சிலர் ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சுதர்சனும் அவர்களது பிசினஸில் இணைய ஆர்வம் காட்டியுள்ளார். பின்னர், அவர் ஒரு வாட்சாப் குழுவில் இணைக்கப்பட்டிருக்கிறார். அந்த குழுவினை இயக்கியவர்கள் தாங்கள் தரும் பொருளை விற்பனை செய்தால் கமிஷன் தருவதாக கூறி இருக்கின்றனர்.
முதலீடு
வாட்சாப் மூலமாக பொருள் விற்பனை செய்ய முடிவு எடுத்த சுதர்சன் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் 2.54 லட்ச ரூபாயை செலுத்தி இருக்கிறார். கொஞ்ச நாளில் சில பொருட்களை அந்த கும்பல் அனுப்பியதோடு, டிஸ்கவுண்ட் எனச் சொல்லி 75,000 ரூபாயையும் வழங்கி உள்ளனர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த வாட்சாப் குழுவில் இருந்து சுதர்சனை நீக்கி இருக்கிறார்கள். பின்னர் அந்த வாட்சாப் குழு முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதர்சன் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். வழக்கை பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் ஆன்லைன் தொழில் எனக் கூறி பணத்தினை சுருட்டிய கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆன்லைன் மூலமாக தொழில் செய்ய நினைத்து 2.54 லட்ச ரூபாயை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றியது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் NSE அதிகாரி சித்ராவுக்கு ஜாமீன் மறுப்பு.. "வீட்டு சாப்பாடு".. கோரிக்கைக்கு பரபரப்பு பதில்!

மற்ற செய்திகள்
