அதிர்ஷ்டம்-னா அது இதுதான்.. சூறாவளியில் சிக்கி சிதைந்த காரிலிருந்து தப்பித்த இளைஞர்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சுழன்றடித்த புயலில் கார் ஒன்று சிக்கியது. இதில் இருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் வசித்து வருபவர் ரிலே லியோன். இவருடைய வயது 16. இவர் வாட்பர்கரில் நடைபெற்ற ஒரு பணிக்கான நேர்காணலுக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து திரும்பும் வழியில் வானம் இருண்டு, பலத்த காற்று வீசத் துவங்கியது. அப்போது, காரினை கவனமாக இயக்கும் முயற்சியில் ரிலே இறங்கினார்.
சுழன்றடித்த சூறாவளி
ஆனால், சற்று நேரத்தில் அந்தப் பகுதியில் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதில் அங்கிருந்த மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. தூசு மற்றும் பல்வேறு பொருட்களுடன் சுழன்றடித்த அந்த சூறாவளியில் துரதிர்ஷ்டவசமாக ரிலேவின் கார் சிக்கிவிட்டது. மூர்க்கமாக வீசிய காற்றில் அகப்பட்ட ரிலேவின் கார் அங்கும் இங்கும் தூக்கி வீசப்பட்டது. சிறிது நேரத்தில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அந்தக் கார் நிதானமாக இயங்கியுள்ளது.
புது கார்
சூறாவளியில் கார் சிக்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ரிலே லேசான காயத்துடன் உயிர்தப்பியிருக்கிறார். இதனை அடுத்து ஃபோர்ட் வொர்த்தில் உள்ள கார் டீலர்ஷிப் புரூஸ் லோரி செவ்ரோலெட், சேதமடைந்த காருக்குப் பதிலாக 2022 ஆம் ஆண்டு அறிமுகமான புதிய மாடல் காரான ரெட் செவி சில்வராடோவை ரிலேவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
கிடைத்த வேலை
சூறாவளியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ரிலே கலந்துகொண்ட நேர்காணலில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சூறாவளியில் அகப்பட்டுக்கொண்ட தருணத்தை நினைவுகூர்ந்த ரிலே," நான் உயிர் பிழைத்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வீடியோக்களைப் பார்க்கும்போது, அது நான்தானா என சந்தேகமாக உள்ளது. ஒருவேளை நான் அங்கு இல்லாமல் இருந்திருக்கலாம் என்பது போல் இருக்கிறது, கடவுளுக்கு நன்றி வீடியோவில், நான் காரை ஓட்டிச் சென்றது போல் தெரிகிறது, ஆனால் உண்மையில் நான் அவ்வாறு செய்யவில்லை. நான் சாலையின் மையத்தில் காரை தரையிறங்கினேன், சாலையில் மீண்டும் வருவதற்காக நான் ஓட்டிக்கொண்டிருந்தேன்" என்றார்.
அமெரிக்காவில் வீசிய சூறாவளியில் சிக்கிய காரில் பயணித்த இளைஞர் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
Omg… just going thru my video. This is a story about a red truck and a tornado…. I CANNOT believe they drove away like that. #txwx #tornado pic.twitter.com/8h0nD88xFv
— Brian Emfinger (@brianemfinger) March 22, 2022

மற்ற செய்திகள்
