"காதலி'ய பழி வாங்குறதுக்காக இப்படியா பண்ணுவே??.." சிக்கித் தவித்த 7 அப்பாவிகள்.. காட்டிக் கொடுத்த 'CCTV'..
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை பழி வாங்க வேண்டி, செய்த செயலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | யம்மாடி..உலகத்தின் மிக உயரமான மரம்.. பழம் பறிக்கனும்னா ராக்கெட்ல தான் போகணும்..! எங்க இருக்கு?
மத்திய பிரதேச மாநிலம், ஜான்சி நகர் பகுதியில் அமைந்துள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பார்க்கிங் பகுதியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்த நிலையில், மொத்த கட்டிடமும் நெருப்பில் சிக்கி உள்ளது.
விசாரணையில் நடந்த ட்விஸ்ட்..
அது மட்டுமில்லாமல், 7 பேர் இந்த விபத்தில் உயிரிழிக்க, சுமார் 10 பேர் வரை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததையடுத்து, போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். ஆரம்பத்தில், மின் கசிவு மூலம் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதி உள்ளனர்.
ஆனால், அப்பகுதியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது தான், பேரதிர்ச்சி ஒன்று போலீசாருக்கு காத்திருந்தது. பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் தீ வைக்கிறார். அதே போல, சிசிடிவியை சேதப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் விஷயங்களும் தெரிகிறது. இதன் பின்னர், விபத்துக்கு காரணமாக இருந்த இளைஞர் பற்றி விசாரித்த போலீசார், விபத்து நடந்த சில மணி நேரத்தில் அவரைக் கைது செய்ததாகவும் தெரிகிறது.
காதலியை பழி வாங்க..
தொடர்ந்து, இது பற்றி நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவலின் படி, ஜான்சி நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுபம் தீட்சித் (எ) சஞ்சய் (வயது 28) என்பவர் தான் விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது. இவர் அந்த அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் சஞ்சய் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த அந்த பெண்ணுக்கு, அவர் ஒரு மோசடி பேர்வழி என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, அவருடனான உறவை அந்த பெண் துண்டிக்கவே, தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார் சஞ்சய். தன்னை மிரட்டியதால், வேறு வழி இல்லாமல் சிக்கித் தவித்து வந்துள்ளார் அந்த பெண். அதே போல, பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
பைக் மீது தீ..
இதனிடையே, அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் நிச்சயம் ஆனதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. அந்த சமயத்தில், இருவருக்கும் தகராறு உருவாக, பெண்ணின் அபார்ட்மெண்ட் பகுதிக்கு வந்த இளைஞர் சஞ்சய், அங்கிருந்த பைக் ஒன்றில் இருந்து பெட்ரோலை எடுத்து, பெண்ணின் பைக்கில் ஊற்றி, அதற்கு தீ வைத்து விட்டுச் சென்றுள்ளார். இதன் பின்னர் தான், அந்த தீ வேகமாக பரவி, அபார்ட்மெண்ட் முழுவதும் பிடித்து, உயிரையும் பலி வாங்கியுள்ளது. தீ பிடித்த சமயத்தில், கயிறு ஒன்றின் உதவியுடன் அந்த பெண்ணும் , அவரின் தாயாரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.
பைக்கை மட்டுமே தீ வைக்க தான் நினைத்ததாகவும், இப்படி ஒரு விளைவு ஏற்படும் என கருதவில்லை என சஞ்சய் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சஞ்சய் மீது வேறு சில இடங்களில் போலீஸ் வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதே போல, சஞ்சய்யின் தீய பழக்கங்கள் காரணமாக, அவரது பெற்றோர்கள் கூட தற்போது தொடர்பில் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
காதலியை பழி வாங்கும் நோக்கில், இளைஞர் செய்த செயலால், 7 பேர் வரை பலி ஆகியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
