ராணுவத்துல சேரனும்..டெய்லி 10 கிமீ ஓட்டம்.. வறுமையிலும் விடாது போராடிய இளைஞர்.. வீடியோவை பார்த்துட்டு ராணுவ அதிகாரி போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தினமும் சாலையில் 10 கிலோமீட்டர் ஓடியே தனது வீட்டிற்குச் செல்லும் இளைஞரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Breaking: 132 பயணிகளுடன் பறந்த விமானம் மலைப்பகுதியில் மோதி நொறுங்கிய சோகம்.. அதிர்ச்சியில் சீனா..!
உத்ரகாண்ட் மாநிலத்தின் பரோலா பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் மெஹ்ரா. இவருடைய வயது 19. இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தீராத ஆசை உடைய பிரதீப் தனது வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார். இரவு பணி முடிந்ததும் உணவகத்தில் இருந்து ஓடியே தனது வீட்டிற்கு செல்வது பிரதீப்பின் வழக்கமாகும்.
வைரல் வீடியோ
இந்நிலையில் திரைப்பட இயக்குனர் வினோத் காப்ரி எதேச்சையாக அப்பகுதி வழியே கார் ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது தான் ஓடிக்கொண்டிருந்த பிரதீப்பை பார்த்திருக்கிறார். 'எதற்காக இப்படி என ஒடுகிறாய்?' வினோத் கேட்க அதற்கு பிரதீப் சொன்ன பதில் அவரை திகைக்க வைத்திருக்கிறது.
This is PURE GOLD❤️❤️
नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया
मैंने सोचा
किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए
बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया
वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu
— Vinod Kapri (@vinodkapri) March 20, 2022
இதுகுறித்து ஓடிக்கொண்டே பதில் சொன்ன பிரதீப்,"இந்திய ராணுவத்தில் சேர்வதே எனது லட்சியம் ஆகும். தினமும் காலையில் எட்டு மணிக்கு எழுந்து உணவு தயாரித்தலில் ஈடுபடுவதால் என்னால் காலை நேரங்களில் பயிற்சி செய்ய முடியவில்லை. என் அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பயிற்சிக்காக வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன். ஆகவே, இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் நான் பயிற்சி பெற்று வருகிறேன்" என பிரதீப் தெரிவித்திருக்கிறார்.
வினோத் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். வறுமையிலும் தன்னுடைய கனவினை நோக்கி ஓடும் இந்த இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
என்ன ஒரு மனிதர்
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதீப் மெஹ்ரா ஓடும் வீடியோவை பகிர்ந்து "இன்றைய காலை பொழுதை இது சிறப்பாகியுள்ளது ! என்ன ஒரு மனிதர் !" என பதிவிட்டுள்ளார்.
உதவி
பிரதீப்பின் வீடியோ வைரலானதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா இந்த வீடியோவை பார்த்து பிரம்மித்ததுடன் பிரதீப்பிற்கு உதவி செய்யவும் முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்," அவரது தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. மேலும் அவரது தகுதியின் அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்புத் தேர்வில் தேர்ச்சி பெற அவருக்கு உதவுவதற்காக, குமான் ரெஜிமென்ட்டின் கர்னல், கிழக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராணா கலிதா கர்னல் உடன் உரையாடினேன். அவர் தனது படைப்பிரிவில் ஆட்சேர்ப்புக்காக சிறுவனைப் பயிற்றுவிப்பதற்குத் தேவையானதைச் செய்வதாக கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
கடினமாக பயிற்சி செய்துவந்த பிரதீப்பிற்கு ராணுவ அதிகாரி ஒருவர் உதவுவதாக அறிவித்திருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
