கடையில் தனியாக இருக்கும் ‘பெண்கள்’ தான் குறி.. சிக்கிய பட்டதாரி இளைஞர்.. வெளியவந்த திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Also Read | காயத்தால் தீபக் சஹாருக்கு வந்த சோதனை.. பறிபோகும் மிகப்பெரிய வாய்ப்பு? கசிந்த தகவல்..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கருங்கல் மற்றும் இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக கடையில் இருக்கும் பெண்களை குறிவைத்து நகை திருட்டு சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் டிப்டாப் ஆடை அணிந்து பைக்கில் வரும் இளைஞர் ஒருவர், தனியாக கடையில் இருக்கும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பைக்கின் எண்ணை வைத்து அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த ஆன்றோ சுபின் (வயது 28) என்ற பட்டதாரி இளைஞர் என்பது தெரியவந்தது.
இவர் அப்பகுதியில் அக்வேரியம் கடை நடத்தி வந்துள்ளார். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவருடன் ஆன்றோ சுபினுக்கு முறையற்ற காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி இவருடன் வாழ தொடங்கியுள்ளார்.
இந்த சமயத்தில் அரசு வேலைக்காக 5 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி ஒருவரிடம் கொடுத்து ஏமாந்ததாக ஆன்றோ சுபின் கூறியுள்ளார். மேலும் வருமானம் இல்லாததால் வேலைக்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனை அடுத்து தனியாக கடையில் இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதை விற்று கிடைக்கும் பணத்தில் கடனுக்கு வட்டி கட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த 30 சவரன் நகை, ஒரு சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘MI டீம் மேல அப்படி என்ன கோவம்’.. வேறலெவல் சம்பவம் பண்ணிய தவான்.. ரெய்னாவின் சாதனை முறியடிப்பு..!

மற்ற செய்திகள்
