தோல்வி அடைந்த லக்னோ.. அணி வீரர்கள் மீது கௌதம் கம்பீர் காட்டம்! பரபரப்பு வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2022: நேற்று செவ்வாய்க்கிழமை புனேயில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் லக்னோ அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Also Read | 30 வருசமா ஆண் வேடமிட்டு வாழ்ந்து வரும் பெண்.. பின்னணியில் உள்ள உருக்கமான காரணம்..!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் அனைத்து வீரர்களிடமும் கௌதம் கம்பீர் டக் அவுட்டில் எதுவும் பேசாமல், பெவிலியன் டிரஸ்ஸிங் ரூம் உள்ளே கம்பீர் மிகப்பெரிய உரையை நிகழ்த்தினார்.
145 ரன்களை சேசிங் செய்த எல்எஸ்ஜி அணி வெறும் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஷித் கானின் 4/24 என்ற சிறப்பான பந்து வீச்சை பதிவு செய்தார். குயின்டன் டி காக் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இரு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரைப் பதிவு செய்ய முடிந்தது. முகமது ஷமி 3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார், சாய் கிஷோர் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டிக்குப் பிறகு, அணியின் மெண்டரான கம்பீர், அணியின் செயல் திறன் குறித்து வீரர்களிடம் உரையாற்றினார். அதில், "தோற்றுப்போவதில் தவறில்லை. கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற வேண்டும், ஒரு அணி தோற்க வேண்டும். ஆனால் எப்படி தோற்கிறோம் என்பதில் நிறைய தவறு இருக்கிறது.
இன்றைய போட்டியில் போராடாமல் விட்டுவிட்டோம். மிக பலவீனமாக விளையாடினோம், ஐபிஎல் போட்டியில் பலவீனமாக ஆடுவதற்கு இடமில்லை. இந்த தொடரில் நாம் பல அணிகளை வீழ்த்தி நல்ல கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறோம். ஆனால் இன்று போதுமான போட்டி விழிப்புணர்வு நமக்கு இல்லாமல் ஆடியுள்ளோம்.
குஜராத் அணியினர் நன்றாகப் பந்துவீசுகிறார்கள் என்பது தெரிந்தது தான், அவர்கள் நன்றாகப் பந்துவீசுவார்கள் என்று நாமும் எதிர்பார்த்தோம். இது ஒரு உலகத் தரம் வாய்ந்த போட்டி, நீங்கள் சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுகிறீர்கள். எந்த சந்தேகமும் இல்லாமல் எதிரணிக்கு சவால் விட வேண்டும். அதற்காகத்தான் நாம் விளையாடுகிறோம். . அதற்காக தான் தினமும் பயிற்சி செய்கிறோம்." என கம்பீர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்றைய வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2022 பிளேஆஃப் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறியது. அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள எல்எஸ்ஜி அணி முதல் நான்கு இடங்களில் இடம் பெற்று பிளேஃஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு வெற்றியையாவது பெற வேண்டும். எல்எஸ்ஜிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் உள்ளன. மே 15 மற்றும் 18 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முறையே விளையாட உள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8