பேஸ்புக் காதல்.. 3 நாள் பேசாம தவித்த காதலன்.. கடைசியா பொண்ணோட பாட்டி போனில் சொல்லிய விஷயம்.. நொறுங்கிப்போன இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி அருகே பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண்ணை காதலித்துவந்ததாக சொல்லப்படும் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
"9 வருஷத்துக்கு முன்னாடியே ரஷ்யா அதை பண்ணிடுச்சு".. குண்டைத் தூக்கிப் போட்ட டெலிகிராம் ஓனர்..!
சேலம் மாவட்டத்தின் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தவர் மணிகண்டன். 26 வயதான இவருக்கு சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமமாகும். இந்நிலையில், மணிகண்டனிற்கு பேஸ்புக் மூலமாக பூமிகா என்ற பெண் பழக்கமாகி இருக்கிறார்.
அவருடன் தொடர்ந்து பேசிவந்த மணிகண்டன் பூமிகாவை நேரில் பார்த்திடாத போதிலும் அவர் மீது காதல் கொண்டதாகத் தெரிகிறது. தினமும் போனில் இருவரும் பேசிக்கொண்டிருந்த வேளையில் திடீரென 3 நாள் பூமிகாவிடம் இருந்து எவ்வித அழைப்பும் மணிகண்டனிற்கு வரவில்லை.
மன உளைச்சல்
பூமிகாவிடம் இருந்து 3 நாட்களாக அழைப்பு வராததால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தொடர்ந்து பூமிகாவின் போனிற்கு கால் செய்திருக்கிறார். அப்போது போனை எடுத்த பூமிகாவின் பாட்டியிடம் பூமிகா பற்றிக் கேட்டு இருக்கிறார் மணிகண்டன். போனில் பேசிய பாட்டி, நெஞ்சு வலியால் பூமிகா இறந்து விட்டதாகத் தெரிவிக்கவே மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
விபரீத முடிவு
காதலி நெஞ்சு வலியால் உயிரிழந்ததை அடுத்து மனம் உடைந்த மணிகண்டன், விஷத்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த மணிகண்டனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அவரது பெற்றோர் சேர்த்திருக்கின்றனர். அப்போது மணிகண்டனிடம் அவரது பெற்றோர் "எதற்க்காக இப்படி ஒரு முடிவை எடுத்தாய்?" எனக் கேட்டு இருக்கின்றனர்.
நடந்தவற்றை மணிகண்டன் கூறியிருக்கிறார். இதனிடையே, மணிகண்டனின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி மணிகண்டன் மரணம் அடைந்து இருக்கிறார்.
இதனை அடுத்து இதுகுறித்து மணிகண்டனின் தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெஞ்சு வலியால் காதலி உயிரிழந்ததை அறிந்து விபரீத முடிவெடுத்த மணிகண்டன் உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050