யம்மாடி..உலகத்தின் மிக உயரமான மரம்.. பழம் பறிக்கனும்னா ராக்கெட்ல தான் போகணும்..! எங்க இருக்கு?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக உயரமான பப்பாளி மரம் பிரேசிலில் இருப்பதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பப்பாளி
பொதுவாக கண்களுக்கு நல்லது என்று கூறப்படும் பப்பாளி பழத்தில், ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த மரங்கள் அதிகபட்சமாக 16 அடி முதல் 33 அடி வரையில் வளரக்கூடியவை. இந்த மரம் மெக்சிக்கோவை பூர்வீகமாக கொண்டது என்றாலும் தற்போது உலகமெங்கிலும் பப்பாளி பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் உலகின் மிக உயரமான பப்பாளி மரம் பிரேசிலில் இருப்பதாக அறிவித்துள்ளது கின்னஸ் அமைப்பு.
உலகின் மிக உயரமான பப்பாளி மரம்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த டார்சியோ ஃபோல்ட்ஸ் மற்றும் கில்பெர்டோ ஃபிரான்ஸ் ஆகிய இருவரும் பிரேசிலின் நோவா அரோராவில் தங்களுக்குச் சொந்தமான பண்ணையில் இந்த மரம் அதிவேகமாக வளர்ந்து வருவதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த மரத்தின் உயரம் டிரோன் மூலமாக அளக்கப்பட்டது. அதன் பயனாக இந்த மரம், 14.55 மீ (47 அடி மற்றும் 8.83 அங்குலம்) இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இந்த மரம் உலகின் மிக உயரமான பப்பாளி மரம் என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஃபோல்ட்ஸ்,"கின்னஸ் அங்கீகாரம் கிடைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. உலகின் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு மரத்திற்காக என்னுடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.
முந்தைய சாதனை
முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த ஜந்து பால் என்பவருக்கு சொந்தமான பப்பாளி மரம் தான் உலகின் மிகப்பெரிய பப்பாளி மரமாக அறிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அளக்கப்பட்டபோது இந்த மரம் 14.08 மீ (46 அடி 2.33 அங்குலம்) இருந்தது. இந்த சாதனையை தற்போது இந்த பிரேசில் மரம் முறியடித்துள்ளது.
பிரேசிலின் நோவா அரோராவில் வளர்ந்துள்ள இந்த உலகின் மிகப்பெரிய பப்பாளி மரத்தை உள்ளூர் மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8