'வடை போடவேண்டிய சட்டியுடன் அங்க ஏ போனீங்க தம்பி .. வாங்க ஜெயிலுக்குப் போகலாம்'.. தூக்கிய போலீஸ்
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் ATM மிஷினை உடைக்க வாணலி சட்டியை உபயோத்திருப்பதாக அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ATM ற்குள் வாணலி சட்டியுடன் இளைஞர் நுழைந்த சம்பவம் அங்கே பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் உள்ள ATM-ற்குள் நுழைந்த அஷத் அலி என்ற நபர் தான் கொண்டு வந்திருந்த வாணலி சட்டியை வைத்து ATM மிஷினை உடைத்திருக்கிறார். இதனையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது, வாணலி சட்டியுடன் அஷத் நடத்திய வேடிக்கையை ATM மையத்தில் இருந்த சிசிடிவி காட்சி மூலமாக கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, அஷத் அலியை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர். இந்த விசாரணையின் போது, காவல்துறையினர் நூற்றுக்கணக்கான சிசிடிவி வீடியோக்களைப் பல்வேறு இடங்களில் சோதனை செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உத்தம் நகர் பகுதியில் உள்ள அஷத் அலியின் வீட்டில் அவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் இருந்த, திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாணலிச் சட்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
மதுவுக்கு அடிமை
ஏடிஎம் மையத்தில் வாணலி சட்டியை வைத்து மெஷினை உடைக்க முயற்சித்த வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஷத் அலி, மதுவுக்கு அடிமையானவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த திருட்டு சம்பவம் பற்றி அலி காவல்துறை அதிகாரிகளிடம் பேசுகையில்,"நான் பொருளாதார சிக்கலில் இருந்தேன். அதன் காரணமாக ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்தேன்" எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
மிடில் கிளாஸ் பெண்கள் தான் டார்கெட்.. இதுவரை 14 பெண்கள்... சிக்கிய 54 வயது மன்மதன்?