"ஒரு பிரதமர்ன்னு கூட பாக்காம..." "என்னயா இந்த வெறட்டு வெறட்டுற..." "இதெல்லாம் ஆஸ்திரேலியாவுல மட்டும் தான் நடக்கும்..."
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் தனது வீட்டின் புல்தரையில் நின்ற பிரதமரை அங்கிருந்து வெளியேறச் சொன்ன நபருக்கு புன்முறுவலுடன் பிரதமர் ஸ்காட் மோரிஸன் பதிலளித்த விதம் காண்போரை வியக்க வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கூகாங் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஸ்காட் மோரிஸன், கொரோனாவால் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தனது வீட்டின் புல் தரையில் யாரோ நின்று கொண்டிருப்பதை கவனித்த அந்த வீட்டின் உரிமையாளர், சமீபத்தில் தான் அங்கு விதைகளை நட்டதாகவும் நகர்ந்து நிற்குமாறும் அங்கிருந்தவர்களை பார்த்து தொலைவிலிருந்து கூறினார்.
இதனை அடுத்து ஸ்காட் மோரிஸன், சட்டென்று அங்கிருந்து நகர்ந்து நின்றதோடு, செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் புல்தரையை விட்டு வெளியே வருமாறு அழைத்தார். மேலும், அவருக்கு சிரித்தபடியே தம்ஸ் அப் காட்டி விட்டு தன் உரையைத் தொடர்ந்தார்.
‘Get off the Grass!’ Sums up the new housing stimulus program!! https://t.co/BRZ32z27Mc
— James Stacey (@James_Stacey_) June 4, 2020
பிரதமரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.