'பிரம்மாண்ட புழுதிப் புயல்...' 'கடலைக்' கடந்த 'அற்புதக் காட்சி...' 'வைரலாகும் வீடியோ...'
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் புழுதி புயல் வீசியதன் பிரமிப்பான காட்சிகளை திரைப்பட தயாரிப்பாளர் கிறிஸ் லூயிஸ் என்பவர் படமாக்கியுள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Geraldton என்ற கடற்கரை பகுதியில் வானுக்கும் கடலுக்கும் இடையே பழுப்பு நிற புழுதிக் காற்று வீசிய காட்சியை கிறிஸ் லூயிஸ் என்ற திரைப்படக் தயாரிப்பாளர் படம் பிடித்துள்ளார். இந்த புழுதிப் புயல் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் பயணித்து இந்த கடற்பரப்பை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மங்கா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெற்குப் பகுதியில் இந்த புழுதிப் புயல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே புயல் காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சேதத்தால், 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.