ஆஸ்திரேலிய பிரதமர் சமைத்த ‘சமோசா வித் மாங்காய் சட்னி’.. அதற்கு பிரதமர் மோடியின் ‘ருசிகர’ பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்திய பிரதமர் மோடிக்கு சமோசா சமைத்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதிற்கு மோடி சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்கார் மோரிசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று சமோசா உடன் மாங்காய் சட்னியும் தயாரித்துள்ளேன். இந்த வாரம் காணொளி காட்சி வழியாக நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறேன். அவர் சைவ உணவு உண்பவர். நான் அவருடன் இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இந்தியப் பெருங்கடல் பகுதியை இந்த சமோசா இணைத்துள்ளது. பார்ப்பதற்கே ருசியாக தெரிகிறதே ஸ்காட் மோரிசன். நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதும் நாம் இணைந்து சமோசாவை மகிழ்ச்சியாக ருசிக்கலாம். வரும் 4ம் தேதி உங்களுடன் நடக்கும் வீடியோ சந்திப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இது ட்விட்டர் வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Connected by the Indian Ocean, united by the Indian Samosa!
Looks delicious, PM @ScottMorrisonMP!
Once we achieve a decisive victory against COVID-19, we will enjoy the Samosas together.
Looking forward to our video meet on the 4th. https://t.co/vbRLbVQuL1
— Narendra Modi (@narendramodi) May 31, 2020

மற்ற செய்திகள்
