'48 மணி நேரத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்...' 'ஏற்கெனவே மருந்து இருக்கிறது...' 'ஆஸ்திரேலிய' மருத்துவர்களின் வியக்க வைக்கும் 'ஆய்வு முடிவு...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 04, 2020 06:21 PM

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை ஒருவரின் உடலில் இருந்து 48 மணி நேரத்தில் அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

Anti-parasitic drugs can kill the corona virus

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தானது, சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான இந்த ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.

இந்த மருந்தின் ஒரு டோஸ் மூலம், கொரோனா வைரஸின் அனைத்து ஆர்என்ஏ மூலக்கூறுகளையும் முழுமையாக 48 மணி நேரத்திற்குள் அகற்ற முடியும் என்றும், 24 மணி நேரத்தில் கூட அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதையும் நாங்கள் கண்டறிந்தோம் என்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவன விஞ்ஞானி கெய்லி வாக்ஸ்டாப் தெரிவித்துள்ளார்.

வைரசில் ஐவர்மெக்டின் மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில், அதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லை என்பதால், உலகெங்கிலும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறை மக்களுக்கு உதவக் கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுக்கத் தகுந்த சரியான அளவை கண்டுபிடிக்கும் சோதனைகளில் தற்போது மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.