என் 'மகள்' 4 மணிக்கே 'வேலைக்கு' சென்று விடுவாள்... 'அதற்குள்' இதை செய்யுங்க... 'மகளுக்கு தாய் செய்த உதவி...' 'நெகிழச் செய்த பொதுமக்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 30, 2020 02:40 PM

இங்கிலாந்தில் ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவருக்கு அவர் வசித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மரியாதை செலுத்திய சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

People respecting ambulance service staff in u.k.

இங்கிலாந்தில் அவசர உதவி ஆம்புலன்சில் பணியாற்றும் ஊழிர்களுக்கு இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் கைத்தட்டி ஊக்குவிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சேவை ஆற்றுபவர்களின் சேவையை பாராட்டும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி மக்கள் அனைவரும் தயாராக இருந்த நிலையில், அவசர சேவைப் பிரிவில் பணியாற்றி வரும் பேசிங்ஸ்டோக் பகுதியைச் சேர்ந்த டெய்லா போர்ட்டர் என்பவர் அவசரமாக மாலை 4 மணிக்கே வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால், தன் மகளை பெருமைப்படுத்த நினைத்த டெய்லாவின் தாயார் அக்கம் பக்கத்தினரிடம் மாலை 4 மணிக்கு கைத்தட்டி டெய்லாவை ஊக்கப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

இதையறியாத டெய்லா வழக்கம்போல பணிக்குப் புறப்பட்டபோது அக்கம் பக்கத்தினர் அனைவரும் கைத்தட்டி தங்களது வாழ்த்துகளைச் சொல்ல டெய்லாவின் கண்கள் குளமானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : #CORONA #ENGLAND #AMBULANCE #STAFF #RESPECT