VIDEO: கொரோனா முன்கள வீரர்களுக்கு மரியாதை!.. பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்கள்.. மனம் நெகிந்த மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | May 03, 2020 03:41 PM

கொரோனா வைரஸூக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோரை முப்படையினரும் இன்று கௌரவிக்கும் வகையில் மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்டன.

indian army tribute covid19 warriors and their vote of thanks

கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கௌரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்தன. சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் ஆகிய 9 போர் விமானங்கள் டெல்லியின் வான்பரப்பில் பறந்து மருத்துவர்களை கௌரவித்தன.

தவிர மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததையடுத்து மருத்துவமனைகள் முன்பு பேண்டு வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. அதன் படி மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது.

சென்னையில் கொரோனா சிகிச்சை அளித்துவரும் பிரதான மருத்துவமனைகளான ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றின் மீது மலர்கள் தூவப்பட்டன. இதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனையின் வெளியே வந்து நின்று மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.