'போலோ...' 'ஜெய் கோமாதா கி...' 'ஜெய் கோமாதா கி...' களைகட்டிய 'மாட்டு கோமியம்' பார்ட்டி... சியர்ஸ்... 'மஜா ஆகயா...' 'மஜா ஆகயா...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 14, 2020 08:37 PM

கொரோனா வைரஸ் பாதிப்பலிருந்து தப்பிக்க அகில பாரத இந்துமகா சபா நிர்வாகிகள் மாட்டு கோமியம் பார்ட்டி நடத்திய நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

hindu mahasabha organises cow mutra party to fight corona virus

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவினாலும் பரவியது இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு தெரிந்த மருத்துவத்தை கூற ஆரம்பித்து விட்டனர். ஒருவர் கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா கிட்ட கூட நெருங்காது எனக் கூறினார். மற்றொருவர் பீர் குடித்தால் கொரோனா தாக்காது எனக் கூறுகிறார். வேறொருவர் பழைய கஞ்சியும், பச்சை மிளகாயும் சாப்பிட்டால் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் எனத் தெரிவிக்கிறார். இன்னொருவர் மிளகு, திப்பிலி, லவங்கம் உள்ளிட்ட பொருட்களை அறைத்து சாப்பிட்டால் கொரோனாவுக்கு குட்பை சொல்லாம் எனக் குறிப்பிடுகிறார்.

சற்று வித்தியாசமாக அகில பாரத இந்துமகா சபா நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை குடித்தால் கொரோனாவை கொன்று விடலாம் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர். கூறியதோடு விட்டு விடாமல் கோமியம் குடிக்கும் பார்டிக்கும் அழைப்பு விடுத்தனர்.

அப்படியெல்லாம் யாரும் கோமியத்தை குடித்து விடமாட்டார்கள் என நினைத்தால் சொன்னது போலவே கோமியம் பார்ட்டியை அவர்கள் நடத்தி விட்டனர். டெல்லியில் அகில பாரதி இந்து மகா சபா நிர்வாகிகள் இணைந்து மாட்டு கோமியத்தை அருந்தும் நிகழ்ச்சியை நடத்தினர்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர் .

Tags : #DELHI #COW MUTRA #PARTY #HINDU MAHASABHA #CORONA