பிரபல ஜோதிடரின் மனம் நெகிழும் செயல்...! 'இது எனக்கு கெடச்ச பெரும் பாக்கியம்...' அவங்களுக்கான நன்றி தான் இது...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 26, 2020 10:54 PM

கொரோனோ வைரஸ் சூழலில் மக்கள் நலம் காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கும்,  ஏழை எளிய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கியுள்ளார் பிரபல ஜோதிடர் ஷெல்வி.

Fascinating thing done by the famous astrologer

தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சுமார் 1020 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலில் கொரோனோ வைரஸ் எளிதாக பரவும் வாய்ப்புள்ள கொரோனோ தனிமை வார்டில், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமின்றி கடமையாற்றி வருக்கின்றனர் . இவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரபல ஜோதிட கணிப்பாளர் ஷெல்வி மனம் நெகிழும் செயலை செய்துள்ளார். 

பிரபல ஜோதிட கணிப்பாளரான ஷெல்வி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தனிமை வார்டில் பணிபுரிந்து வரும் மருத்துவமனை ஊழியருக்கு நன்றி செலுத்தும் விதமாக சுமார் 2000 கிலோ மதிப்புடைய அரிசியை இலவசமாக அளித்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் அட்சயதிருதியான இன்று, அவரது சுற்றுவட்டாரங்களில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், தூய்மை பணியாளர் உட்பட சுமார் 400 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அளித்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட மக்கள் ஷெல்விக்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தனர், இதையே அட்சயதிருதியில் தனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார். 

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனுபவித்து வரும் இந்த கொடிய நோயின் தாக்கம் இனி நீங்கும் எனவும், அதற்கு அடையாளமாக மக்கள் மனம் குளிரும் வண்ணம் இன்று மழை பெய்துள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : #ASTROLGER