'47 மாடி' கட்டடத்தில் 'கொழுந்து விட்டு' எரிந்த 'பிரம்மாண்ட தீ...' 'கட்டடத்தில்' தங்கியிருந்த '300 குடும்பங்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 06, 2020 10:02 AM

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 47 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

A 47-storey building fire in Sharjah, United Arab Emirates

ஷார்ஜாவின் அல்நதா (Al Nahda) பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 47 மாடிகளைக் கொண்டது. தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த 47 மாடி கட்டடம் உள்ளது.

இந்த 47 மாடி கட்டடத்தில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து மினா தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் 47 மாடி கட்டடத்தில் இருந்து 300க்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதில் 9 பேருக்கு மட்டும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்துவிட்டு பிரம்மாண்டமாக எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறினர்.