'முடி வெட்ட முடியாது...' 'கொரோனா வைரஸ் வந்திடும்...' 'கையில துப்பாக்கியோட கடுப்பான கஸ்டமர்...' பதற வைக்கும் கொடூர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில் முடி வெட்ட மறுத்ததால், முடி சீர்த்திருத்தும் கடை நடத்தி வருபவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக மக்கள் வெளியே செல்லவும், அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இதில் முடி வெட்டும் கடைகளும் அடக்கம்.
இந்நிலையில் தினேஷ் தாக்கூர் என்பவர் பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தில் உள்ள மெய்ன்வா என்ற கிராமத்தில் முடி சீர்த்திருத்தும் கடை நடத்தி வந்த இவர், ஊரடங்கு காரணமாக சில நாட்களாக தனது கடையை மூடியுள்ளார்.
சில மாவட்டங்களில் முடி திருத்தம் செய்வதாலும் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற செய்தி வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கிராம மக்களுக்கும் முடி திருத்தம் செய்யக்கோரிய போதும் அவர் கடையை திறக்கவில்லை.
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த பிபின் தாஸ் என்பவர் தாக்கூரிடம் தனது முடியை வெட்டுமாறு கேட்டுள்ளார். அதை ஏற்காத தாக்கூருக்கும் தாஸிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடைசி வரை தாகூர் முடி வெட்டிவிட சம்மதிக்கவில்லை. கொரோனா தொற்று பரவிட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாஸ் கோபத்தோடு அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை தினேஷ் தாக்கூர் துப்பாக்கி குண்டு தாக்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் தாக்கூருக்கும் தாஸிற்கும் இடையே நடைபெற்ற தகராறு தெரிய வர அவரை தேடியுள்ளனர். ஆனால் தாஸ் தப்பித்து ஓடியுள்ளார். மேலும், இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய பிபின் தாஸை தேடி வருகின்றனர்.
இந்த ஊரடங்கு காலத்திலும் முடித்திருத்தம் செய்ய மறுத்ததால் கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.