VIDEO: 'எங்களிடம்' ஒப்படையுங்கள்.. செருப்புகள், கற்களால் 'தாக்கிய' பொதுமக்கள்.. போலீசார் தடியடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 30, 2019 07:57 PM

பெண் மருத்துவர் பிரியங்கா மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் நால்வரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.

Locals protest over rape, murder of woman doctor in Hyderabad

சஞ்சல்குடா மத்திய சிறைக்கு குற்றவாளிகள் நால்வரையும் அழைத்து செல்லும்முன், ஷாத்நகர் போலீஸ் ஸ்டேஷனில் குற்றவாளிகள் இருந்தனர். அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து செருப்புகள், கற்களை போலீசார் மீது பொதுமக்கள் வீசி எறிந்தனர். நிலைமை எல்லை மீறி போனதால் போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.